பச்சிளம் குழந்தை புதரில்..

போரூர் அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் மின்சார சுடுகாடு அருகே முட்புதரில் இருந்து நேற்று இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர் ரத்னகுமார் குழந்தையை மீட்டு சின்ன போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். பிறந்து 2 அல்லது 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசி சென்றுள்ளனர்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.