நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா..! வெளியான பரபரப்பு தகவல்..!!
பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவின் மகள் வரலக்ஷ்மிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
வரலக்ஷ்மி தமிழ் சினிமாவில் “போடா போடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின் மலையாள, கன்னட படங்களிலும் நடித்து வந்தார். இப்போது, “சர்கார்,சண்டக்கோழி, நீயா 2” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஷாலை, இவர் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து இருவருமே வாய் திறக்காமலே இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மிக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக, சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி.
இதுகுறித்து நடிகை வரலக்ஷ்மி கூறியதாவது,
எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. நான் திருமணமே செய்துகொள்ள போவது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.