கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் (சிலை கடத்தல் மன்னன்) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இன்பத்தை சம்பவம் தமிழகத்தி;ல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் அடுத்து அவரை கைது செய்த போலீசார் கடத்தப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், தீனதயாளன் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், பலதிடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இதனையடுத்து அவரின் கூட்டாளிகள் பலரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களை தொடர்ந்து கடந்த வரம், தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண்ராவ் ஆகியோர் இந்த விவகாரத்தில் சிக்கவே, இவர்களின் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.
சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. போயஸ்கார்டனில் உள்ள கிரண்ராவின் வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து, சிலை தடுப்பு பிரிவு போலீசார் ரன்வீர்ஷாவையும், கிரண்ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்ததை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அனுப்பிய சம்மனுக்கும் ஆஜர் ஆகவில்லை. மாறாக முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்து, தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கப்பட்டுள்ளது, அதில், இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பரிசு சன்மானமாக வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.