48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு!!

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யா அறிவுறுத்தியுள்ளத என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

சமீபகாலமாக இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ‘சைபர் அட்டாக்’ இணையதள முடக்கம் செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும் ‘டொமைன் நேம் சிஸ்டம்’ நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்கான விரிவான பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதால் இவை முழுமையாக முடிவடைய 48 மணிநேரங்கள் வரை ஆகலாம் என தெரிகிறது. இந்த சமயத்தில் இணையதள சேவை முடங்குவதுடன் குறிப்பிட்ட சில இணையதள பக்கங்களை பார்க்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது என்று அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.