ஓர் மர்ம நகரம்???

துருக்கி நாட்டில் அமைந்துள்ள ஓர்  மர்ம நகரம் தான் டெரிகியு. அதன் புகைப்படமே கீழே தரப்பட்டுள்ளது.

இந்த இடம் பல அறைகளைக்கொண்ட நிலக்கீழ் நகரமாகும். தரையில் இருந்து சுமார்  80 மீற்றர் ஆளமுடையதாக இது காணப்படுகிறது. அத்தோடு  சுமார் 20 ஆயிரம் மனிதர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வசதியும் இது கொண்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

1963 ஆம் ஆண்டு துருக்கியின் டெரிகியு நகரில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தொல்பொருள் ஆய்வாளர்கள்  ஆராய்ந்ததில் அது ஒரு மிகப்பெரும் பாதாள உலகம் என்பது கண்டறியப்பட்டது.

கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இது அமைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அல்லது ரோமானியர் காலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது.

இருப்பினும் எரிமலையின் மென்மையான பாறைகளைக் கொண்டு இது அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காற்று உட் செல்ல சுவர்களில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டிருப்பதாகவும் இப் பாதாள உலகத்திற்குள்ளே உணவு மற்றும் நீர் கிடைப்பதாலும் இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் வெளி உலகத்திற்கு வருவதில்லை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதில் சுவாரஸ்யமான விடயம்  யாதெனில் இந் நகரை சுற்றியுள்ள ஊர்களிலுள்ள பண்டைய கதைகளில் கூட இந் நகரம் பற்றிய எந்தக்குறிப்பும் இடம்பெறவில்லை.

இருப்பினும் இந்த நகரில் வாழ்ந்தவர்கள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விளக்கமோ, விடையே கிடைக்கவில்லை.