தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபவணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 29 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரத்தை நோக்கி நடை பவணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில், இன்று வவுனியாவை வந்தடைந்த நடைபவணி தற்போது கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படுகின்றது.