கவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி புகார் கூறிய விவகாரத்தின் தொடர்ச்சியாக, `வைரமுத்துவின் மூத்த மகன் மதன் கார்க்கி , சின்மயிக்கு ஆதரவாக டுவிட் செய்தது வைரலாகியது.
இந்நிலையில் அப்பா வைரமுத்து விவகாரம் மற்றும் அண்ணன் மகன் கார்க்கியின் டுவிட் குறித்து இளைய மகன் கபிலன் கூறியதாவது, இந்த விவகாரத்தில் அப்பாவே ட்விட்டர்ல பதில் சொல்லிட்டார்.
சின்மயிக்கு ஆதரவாக மதன் கார்க்கி பதிவிட்டார் என்று சொல்ற டுவீட்டை நல்லா கவனிச்சுப் பாருங்க. அது 2012-ல் சின்மயிக்கு நிகழ்ந்த ஒரு பிரச்னையின்போது பதியப்பட்டது. மேற்கொண்டு இந்த விவகாரத்துல நான் எதுவும் பேச விரும்பலை, வேண்டாம் என கூறியுள்ளார்.