ஒரு இடத்தில் ஒரு சோளக் கதிருக்காக கைநீட்டி அதைப் பெற்றுக்கொண்டு போனவர் சாப்பாடு பார்சல் வேண்டாம் என்ற நிலையில் இருந்தார். பின் வற்புறுத்தியதன் பேரில் ஒரு கவளம் சோற்றை விழுங்கிவிட்டு “நித்திரை வருகிறது” என்று சுருண்டுவிட்டார்.
இவரை பற்றி விசாரித்ததில் பெயர் சுரேந்திரன், ஊர் கரடியனாறு, இலுப்படிச்சேனை என்று கூறினார். “பெற்றோர் உற்றார் இல்லை” என்று அவர் சொன்னாலும் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் வேறு தகவல் கிடைத்தது.
காதல் தோல்வியால் தீ வைத்துக்கொண்டாராம்.எரிகாயத் தழும்புகள் கழுத்தின் கீழ் காணக்கூடியதாக உள்ளது. குளித்து பல நாட்கள் ஆனதுபோலும் முகத்தில்கூட கறுப்பு அழுக்குப் படிந்துள்ளது.
கண்கள் சிவந்து, உளறல் பேச்சு என தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சிலவேளை பசி மயக்கம் ஆகவும் இப்படி இருக்கலாம் பீடிப் பழக்கம் உள்ளது.
மழை வெயில் என்றாலும்கூட கடந்த ஒரு கிழமையாக இவர் படுப்பது செங்கலடி சாராயத் தவறனைக்குப் பக்கத்தில் உள்ள வெட்ட வெளியிலாகும்.இவரை பற்றி தெரிந்தால் அவரின் பெற்றோர்களிடம் சேர்த்து வைக்க உதவுங்கள்.