மணமக்கள் செய்த செயல்! இறுதியில் நடந்தது தெரியுமா?

அமெரிக்காவில் மணமகள் முகத்தில் கேக்கை மணமகன் பூச முயற்சித்த போது, அவர் எதிர்பாரதவிதமாக கீழே விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் Elmira பகுதியில் பெயர் தெரிவிக்கப்படாத ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு உறவினர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

அந்த நேரத்தில் மணமக்கள் ஒன்றாக கேக்கை வெட்ட வேண்டும் என்பதற்காக கேக் அவர்கள் முன்பு வைக்கப்பட்டது. இருவரும் கேக்கை வெட்டினர்.

ஒருவரை ஒருவர் கேக்கை எடுத்து ஊட்டினர். விளையாட்டாக மணமகள் திடீரென்று கேக்கை மண்மகளின் முகத்தில் பூச, உடனடியாக மணமகன் அவரது முகத்தில் கேக்கை பூச முயற்சித்து முகத்தில் அழுத்தி பூசிய போது, அவர் எதிர்பாரதவிதமாக கீழே விழுந்தார்.

முதலில் அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள், அதன் பின் அவர் நன்றாக இருக்கிறார் எனறவுடன் சிரிக்கின்றனர். உடனடியாக மணமகன் அவரை பிடித்து முத்தம் கொடுத்து சமாதானப்படுத்துகிறார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.