ஹெரோயினுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் கைதாகும்போது பொலிஸ் சேவையில் இருக்கவில்லையென கூறப்படுகிறது.

பொலிஸ் உத்தியோகத்தரின் தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் கொன்ஸ்டபிள் ஒருவரே கைதாகியுள்ளார்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 200 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

விசாரணைகளின் பின் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை முற்படுத்தப்பட்டார். அவரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

தனது மகன் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் பொம்மைவெளிப் பகுதியில் நடமாடுகிறார் என்று சந்தேகநபரின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.