84 வருடங்களுக்குப் பின் நூலகத்திற்கு திரும்பி வந்த புத்தகம்…!!

அமெரிக்காவிலுள்ள லூசியானா என்ற மாகாணத்திலுள்ள ஒரு நூலகத்தில் 84 வருடங்களுக்கு முன் வெளியே சென்ற புத்தகமொன்று தற்போது திரும்பி வந்துள்ளது.

லூசியானாவைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய வீட்டைச் சுத்தம் செய்யும்போது இந்த புத்தகம் இருந்ததாகவும், இந்தப் புத்தகத்தில் நூலகத்தின் முகவரி இருந்ததால் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறினார்.

பின்னர் அந்தப் புத்தகம் குறித்த குறிப்புக்களிலிருந்து அந்தப் புத்தகத்தை கொண்டு வந்தவரின் தாய் 84 வருடங்களுக்கு முன் நூலகத்திலிருந்து எடுத்துச் சென்றதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் புத்தகத்தை அவர் நூலகத்திலிருந்து எடுத்துச் செல்லும் போது அவருடைய வயது 11 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 84 வருடங்கள் கழித்துப் புத்தகத்தைக் கொண்டு வந்தமைக்காக நூலகம் குறித்த நபரிடமிருந்து மூன்று டாலர் அபராதம் விதித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.