நீர்கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் அந்த பாடசாலையில் உயர் தர வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு ஆபாச காட்சிகள் அடங்கிய காணொளிகள் மற்றும் புகைப்படங்களை காட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக பாடசாலை அபிவிருத்தி சபையினர் நேற்று வலயக் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஏற்கனவே பாடசாலை அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அதிபர், ஆசிரியருக்கு எதிராக இதுவரை எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாடசாலை அபிவிருத்திச் சபையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் கடமையாற்றும் மேற்கத்தேய சங்கீத ஆசிரியர் ஒருவர், குறித்த பெண்கள் பாடசாலையில் உயர் தர மாணவிகளுக்கு கற்பிக்க வந்துள்ளார்.
அப்போது பாடம் சம்பந்தமான விடயங்களை பார்க்க தனது தனிப்பட்ட மடிகணனியை வழங்கியுள்ளார். மாணவிகள் அதனை பார்த்த போது அதில் ஆபாச படங்கள் இருந்துள்ளன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடங்களில் முறைப்பாடு செய்த போதிலும் ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாடசாலை அபிவிருத்திச் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.