மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் வேளாண் பல்கலைக்கழக முதல்வர், மற்றும் பேராசிரியர்கள் உட்பட 6 பேர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் செயல்பட்டு வந்த வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதவிப்பேராசிரியர்கள் தங்கபாண்டியன்,புனிதா, மைதிலி மற்றும் 2 கல்லூரி மாணவிகள் ஆகிய 6 பேர் மீது பாலியல் பலாத்காரம், மானபங்கம், அவதூறாக பேசுதல், மன உளைச்சல் மற்றும் பெண்களின் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி மகிழேந்தி இந்த புகார் குறித்து ஆவணங்களாக தயாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேராசிரியர்கள் தங்கபாண்டியன், புனிதா மற்றும் மைதிலி ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்தும், வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்தும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.