தக்கலை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 11 ஆண்டுகளுக்கு முன் கரண்ட் ஷாக் கொடுத்து கணவரைக் கொன்ற மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பேராணிவிளை என்னும் ஊரில் வச்த்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி சுதா மற்றும் மகனுடன் இவர் வசித்து வந்தார். இவர் திடீரென கடந்த 2007 ஆம் வருடம் காணாமல் போனார். சுதாவின் சகோதரர் ரவி என்பவர் தக்கலை காவல் நிலையத்தி புகார் அளித்தார்.
காவல்துறையினரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கணவர் காணாமல் போனதில் இருந்தே சுதா எவ்வித கவலையும் இன்றி இருந்தூள்ளார். அதனால் சுதாவின் சகோதரர் ரவிக்கு சந்தேகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் தங்கையிடம் சண்டை இட்டுள்ளார். அப்போது ஆன்லின் ஷிபு என்பவர் ரவியை கடத்திச் சென்று மிரட்டி உள்ளார். ரவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சுதாவை தக்கலை காவல்நிலைய அதிகாரி விசாரணை செய்தார்.
விசாரணையில் சுதா தனது கணவரை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டார். சுதா தனது வாக்குமூலத்தில், “கடந்த 2002ல் நான் ராஜசேகரை திருமணம் செய்தேன். அவருடைய நண்பர்கள் ஆல்வின் மற்றும் ஆன்லின் ஷிபு வீட்டுக்கு வருவார்கள். எனக்கு இருவருடனும் பழக்கம் உண்டானது. ஆல்வினுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்ததால் என்னை ஆன்லின் ஷிபுவுடன் இருக்கலாம் என யோசனை தெரிவித்தனர்.
அதன்படி நான் அன்லின் ஷிபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.
அப்போது என் கணவர் அதை பார்த்து தகராறு செய்ததால் நானும் ஆன்லினும் அவரை கொல்ல முடிவு செய்தோம். கடந்த 9/2/2007 அன்று அவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர் மயங்கியதும் மின்சார ஷாக் கொடுத்து கொல்ல முயன்றோம்.
ஆனால் அவர் சாகாததால் தலையணையால் அமுக்கி கொலை செய்தோம் எங்கள் வீட்டு செப்டிக் டேங்கில் சடலத்தை புதைத்து விட்டு காணவில்லை என கூறினோம்” என தெரிவித்துள்ளார். அதை ஒட்டி சுதா கைது செய்யப்பட்டுள்ளார். செப்டிக் டேங்கில் இருந்து ராஜசேகரின் எலும்புகள் கிடைதுள்ளன. அவை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. தலைமறைவாகி உள்ள ஆன்லின் ஷிபு மற்றும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.<