உலக நாடுகளை மிரட்ட வரும் இலங்கை இளைஞனின் ஏவுகணை!

இலங்கையில் இருந்து ரொக்கட் அனுப்பும் மாணவர் ஒருவரின் முயற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதவ முன்வந்துள்ளார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த பாடசாலையில் இடம்பெற்ற X-Ban கண்காட்சியை திறந்து வைக்கும் நடவடிக்கையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டிருந்தார்.

குறித்த பாடசாலை மாணவர்களின் திறமைகளை உலகிற்கு கொண்டு செல்லும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி மாணவர்களின் திறமையை பாராட்டியிருந்தார்.

அங்கு கிஹான் ஹெட்டிஆராச்சி என்ற மாணவனினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட்டிற்கு ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தியிருந்தார்.

அந்த ரொக்கட்டை விண்ணுக்கு அனுப்புவதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.