சென்னைக்கு அடுத்துள்ள வண்டலூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் கற்பழித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் ரயில் நிலையம் பகுதியில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி(25). இவர் அந்த பகுதியில் குப்பை தொட்டிகளில் உள்ள பொருட்களை சேகரித்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் விஜயலட்சுமி ஆடை இல்லாமல் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த பொலிசார் அவரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் மரணமடைந்தார்.
முதல் கட்ட விசாரணையில் அவரது பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் யாரோ குத்தியுள்ளனர்.எனவே, மர்ம நபர்கள் அவரை கற்பழித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.