இந்தியா எங்கள் மீது ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் நாங்கள் இந்தியா மீது 10 முறை தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியின் வானொலி உரைக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி வானொலி உரையில், இந்தியாவின் வளா்ச்சியை பாதிக்கும் வகையில் யாா் செயல்பட்டாலும் அவா்களுக்கு இந்திய ராணுவம் வலுவான பதிலடி கொடுக்கும் என்று பேசியிருந்தாா்.
இந்நிலையில் பிரதமரின் உரைக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியுள்ளாா். பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமா் ஜாவித் பஜ்வா பேசுகையில், ” பாகிஸ்தான் மீது இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் ” என்று தொிவித்துள்ளாா்.
மேலும் எங்களுக்கு எதிராக செயல்படலாம் என நினைக்கும் எவருக்கும், எங்களின் வலிமை மீது சந்தேகம் வரவேண்டாம். நாட்டில் ஜனநாயகத்தினை வலுப்படுத்த ராணுவம் விரும்பியது. பாகிஸ்தான் வரலாற்றில் பொதுத்தோ்தல் மிக வெளிப்படையாக நடந்தது என்று தெரிவித்துள்ளாா்.