குளியலறைக்குள் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அநாகரியமாக நடந்து கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

53, 54 வது வார்ட்டுக்கு அருகிலுள்ள குளியலறையில் குடித்துவிட்டு சட்டவிரோதமாக உள்நுழைந்து அசிங்கமாக நடந்து கொண்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 36 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 11ம் திகதி முற்பகல் குறித்த நபர் அதிக மதுபோதையில் வைத்தியசாலை குளியல் அறைக்குள் நுழைந்து ஆடைகள் இன்றி குளித்துள்ளார்.

இதன்போது வைத்தியசாலையில் பணி புரியும் பெண் ஒருவரும் குளித்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் குளியல் அறையிலிருந்து வெளியில் ஓடிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் குறிப்பிட்டனர்.