சு.ப.தமிழ் செல்வன் சாவைக் காசாக மாற்றிய வைரமுத்து: உண்மை சம்பவம் !

நவம்பர் மாதம் 2ம் திகதி 2007ம் ஆண்டு. கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இருந்து ஸ்கைப் மூலமாக எனக்கு ஒரு தகவல் வருகிறது. விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அவர்கள் நின்ற வீட்டின் மீது கிஃபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று. நான் உடனே அவர் நின்றிருந்த வீட்டில் பங்கர்(பதுங்கு குழி) இருக்கிறது தானே என்றேன். இருக்கிறது அண்ணா. விமானம் பறந்து நோட்டமிட்ட உடனே அவர்கள் அனைவரும் பதுங்கு குழிக்குள் இறங்கிவிட்டார்கள். ஆனால் சிங்கள போர் விமானங்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்தாமல், பதுங்கு குழி மீது தான் தாக்குதல் நடத்தியுள்ளது, என்றார் பவான். (பவான் என்னும் என்பவர் சமாதனச் செயலகத்தில் இருந்த நபர்)

அவர் பேசுவதில் இருந்து அவர் அழுகிறார், மிகமோசமான மன வேதனையில் இருக்கிறார் என்பதனை நான் அறிந்து கொண்டேன். பங்கர்(பதுங்கு குழி) முற்றாக சேதமடைந்துவிட்டது. அதனை நாம் தோண்டிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உள்ளே புதையுண்டவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றார் பவான். கதிகலங்கிப் போனேன் நான். முதல் நாள்(நவம்பர்1ம் திகதி) தான் சு.ப தமிழ்ச் செல்வன் அண்ணா என்னோடு நீண்ட நேரம் பேசி இருந்தார். மறு நாள் இப்படி நடக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

இன் நிலையில் 30 மிடங்கள் கழித்து, மீண்டும் எனது ஸ்கைப் அலறியது. அவசரமாக எடுத்து ஹலோ என்றேன். தமிழ் செல்வன் அண்ணா இறந்துவிட்டார் என்றார்கள். இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை. இறுத்திக் கிரிகைகள் இடம்பெற இருக்கிறது. நெஞ்சை அடைக்கும் துயரத்தோடு, கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக்கு அழைப்பை விடுத்தேன். தமிழ்ச் செல்வன் அவர்கள் இறந்துவிட்டார்கள். அவர் இறுதி அஞ்சலிக்கு ஒரு கவிதை ஒன்றை எழுதி தருவீர்களா என்று கேட்க்க அந்த அழைப்பை விடுத்தேன். ஆனால் அவர் அங்கே இல்லை. ஒரு படத்திற்காக பாடல் ஒன்றை எழுத அவர் ஊட்டி சென்றுவிட்டார். படத்திற்கு பாடல் எழுதுவது என்றால், அவர் தனிமையாக சென்றுவிடுவது வழக்கம். அவர் பங்களாவில் தங்கி இருந்து தான் எழுதுவார் என்று அவருடைய Pஆ தெரிவித்தார்.

என்ன சொல்லவேண்டும் என்று கூறுங்கள் , நான் அவரிடம் உடனே சொல்கிறேன் என்றார் உதவியாளர். தயக்கத்தோடு இச்செய்தியை சொன்னவேளை. அப்படியா சார் இது உண்மையா ? என்று 100 முறை கேட்டார் உதவியாளர். உடனே வைரமுத்துவை தொடர்புகொள்கிறேன் சார். அவருக்கு இதனை தெரியப்படுத்துகிறேன் என்றார் உதவியாளர். சிறிது நேரம் கழித்து எனது மோபைல் போனுக்கு தந்தி செய்தியாளர் தொடக்கம் தமிழகத்தில் இருந்து பல செய்தி ஆசிரியர்கள் தொடர்புகொண்டார்கள். சு.ப தமிழ் செல்வன் இறந்தது உண்மையா என்று கேட்டார்கள். யார் இந்த செய்தியை உங்களுக்கு சொன்னது என்று கேட்டபோது. வைரமுத்துவின் உதவியாளர் என்றார்கள். தலா 50,000 ஆயிரம் வரை பேரம் பேசி இச்செய்தியை விற்றுள்ளார்கள் என்பது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. இதுபோக அன்றைய தினம் சென்னையில் தான் இருந்துள்ளார் வைரமுத்து என்பது மிக அதிர்ச்சியான செய்தி. ஆனால் இறுதிவரை அவர் என்னை தொடர்புகொள்ளவும் இல்லை. சு.ப தமிச்செல்வன் அவர்களுக்கு கவிதை எழுதித் தரவும் இல்லை.

ஆனால் சற்றும் எதிர்பாராமல் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், சு.ப.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு கவிதை ஒன்றை எழுதி வாசித்திருந்தார். தன்னோடு உறவில் இருந்த எவரையும் கலைஞர் மறக்கவில்லை என்பது அறிந்த விடையங்களில் ஒன்று. இவ்வாறு சாவு வீட்டையே காசாக மாற்றும் வைரமுத்து, பெண்கள் வாழ்க்கையில் ஏன் விளையாடி இருக்க மாட்டார் ? சினிமா படங்களுக்கு பாடல் எழுத தனி சொகுசு பங்களா கேட்க்கும் வைர முத்து, இளம் பெண்கள், சில துணை நடிகைகளை இனாமாக கேட்ப்பது வழக்கம் என்ற செய்தி பலகாலமாக பேசப்பட்டு வரும் ஒரு விடையம். ஆனால் அதனை சிம்மயி போன்ற சில மனத் தைரியம் மிக்க பெண்கள் தான் வெளிக்கொண்டு வருவார்கள்.

அந்த வகையில் தனக்கும் ஏனைய பெண்களுக்கும் நடந்த கொடுமைகளை சிம்மயி வெளிக்கொண்டுவந்துள்ளமை பாராட்டத்தக்க விடையம் ஆகும்.

 

கண்ணன்