புலிகளின் தலைவர் தொடர்பில் மார்பு தட்டும் மைத்திரி!

வடக்­கில் போர் நடந்­தா­லும் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­வர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன்.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

கம்­பஹா மாவட்­டத்­தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

இலங்­கை­யி­லேயே வடக்­கில்­ தான் வன அடர்த்தி வீதம் அதி­க­மாக உள்­ளது. அங்­கு­தான் 30ஆண்­டு­க­ளா­கப் போர் நடந்­தது. போர் நடந்­தா­லும் அங்­குள்ள காடு­கள் அழி­யா­மல் பிர­பா­க­ரன் பாது­காத்­தார்.

பிள்­ளை­க­ளின் பிறந்­த­நா­ளுக்கு கேக் வெட்­டா­மல், மரக்­கன்­று­களை நடுங்­கள். மரக்­கன்­று­களை மற்­ற­வர்­க­ளுக்­கும் வழங்­குங்­கள், என்று மைத்­தி­ரி­பால குறிப்­பிட்­டுள்­ளார்.