சிறுவன், கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூரி வீதிக்கருகில் அணில் பிடிக்கச்சென்ற சிறுவன் ஒருவர் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. எட்டு வயதான அமீர் அரூஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனது நண்பர்கள் இருவருடன் யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் அணில் பிடித்து கொண்டிருந்த பின்னர் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.பின்னர் அங்கு தனியாக அச்சிறுவன் அணில் ஒன்றை பிடிப்பதற்கு முயற்சிக்கும் போது அவ்வீட்டில் இருந்த கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார்.

சிறுவனை காணவில்லை என் பெற்றோர்கள் தேடிய நிலையில் இறுதியாக குறித்த உறவினர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர்.இறந்த சிறுவனின் சடலம் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து மரண விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.