உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும்: வைரமுத்து வீடியோவுக்கு சின்மயி பதிலடி

வைரமுத்துவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சின்மயி தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட வைரமுத்து, என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க பொய்யானது. அவை உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடரலாம் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டுவீட் செய்துள்ள சின்மயி, வைரமுத்துவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.