இன்றைய ராசிபலன் (15/10/2018)

  • மேஷம்

    மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைக்கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • கடகம்

    கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • கன்னி

    கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • துலாம்

    துலாம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

  • மகரம்

    மகரம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப்போங்கள். உணவில் காரம், வாயுபதார்த் தங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துச்செல்லும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

  • மீனம்

    மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.