யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக்காலை இவர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்படும் போது அவரிடம் வாள் ஒன்று இருந்ததாகவும், காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆவா குழுவினருடன் தொலைபேசி தொடர்புகளை வைத்திருந்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் ஏற்கனவே குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.