அந்த ஒரு வாரம் செத்துடலாம் என்று தோன்றியது! பல மாதங்கள் கதறி அழுதேன்: வேதனையுடன் சின்மயி

பிரபல பாடகியான சின்மயி சுசி லீக்ஸ் விவகாரத்தில் செய்து போயிடலாம் என்று கூட தோன்றியதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

பாடகியான சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். அதன் பின் சின்மயிக்கு ஆதரவராக பல குரல்கள் எழும்பி வருகின்றன.

சின்மயின் இந்த குற்றச்சாட்டுக்கு மெளனம் காத்து வந்த வைரமுத்து இன்று, என்னிடம் தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை நீதிமன்றம் சொல்லட்டும் என்றும் சின்மயிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று சின்மயி பிரபல தமிழ் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் ஒன்றாக, சுசித்ரா சமூகவலைதளத்தில் சில விடயங்களை முன் வைத்த போது, நீங்கள் உடனடியாக மறுப்பு தெரிவித்தீர்கள்.

இதில் ஒரு நம்பகத்தன்மை இல்லை என்று ஒதுக்கினீர்கள், இப்போது நீங்கள் கூறுவதை மட்டும் எப்படி நம்பமுடியும் என்று கேட்ட போது, நான் சுதிரா மீது சட்டரீதியாக வழக்கு தொடரலாம் என்று இருந்தேன்.

ஏனெனில் அவருடைய அக்கவுண்டில் இருந்து மார்ச் மாதம் மட்டும் எதுவும் வரவில்லை, ஜனவரி மாதத்தில் இருந்து வந்தது. இதனால் நான் அப்போது இது Not Right என்று கூறினேன்.

உடனடியாக அவர் சின்மயி நான்கு முறை கருகலைப்பு செய்த மெடிக்கல் சர்டிபிகேட் என்னிடம் இருக்கிறது, என்னுடைய நிர்வாண வீடியோ வரப்போகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று வேறொருவர் வீடியோ, நாளை இன்னொருவர், அதன் பின் என்னுடைய வீடியோ என்று கூறியிருந்தார்.

அதற்கு நான் உடனடியாக எதற்கு அவ்வளவு நாட்கள் வரை செல்கிறாய், இப்போதே போடு என்று சொன்னேன்,

அதன் பிறகு வந்த அவதூறு, அசிங்கம் போன்றவைகளால் அந்த ஒருவாரம் செத்து போய்விடலாம் என்று தோன்றியது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் சுசிலீக்சிக்கு நான் ஆதரவு தெரிவிக்காததற்கு காரணம், திரையுலகில் இருக்கும் அனைவருக்கும் நடந்தது என்ன என்று தெரியும்.

பல மாதங்கள் அதை நினைத்து அழுதேன், யாரோ ஒருவர் நீ தூக்கு போட்டு சாகலாம் வேசி என்று கூறினார். அப்போதே நான் இந்த உலகம் வேண்டாம், பாட்டு வேண்டாம், எதுவும் வேண்டாம் செத்து போய்விடலாம் என்று தோன்றியது என கூறியுள்ளார்.