கவிஞர் வைரமுத்து மீது குற்றம் சாட்டப்படுவதற்கு பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என்ற எண்ணம் தோன்றுகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
பிரபல பாடகியான சின்மயி, சமீபத்தில் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து பல பிரபலங்களின் உண்மை முகங்கள் வெளியில் வந்தன.
ஆனால் அவை எல்லாம் ஆதரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, தேவைப்பட்டால் ஆதாரங்களை காட்டவும் தயார் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வைரமுத்து மீது குற்றம்சாட்டப்படுவதற்கு பின்னணியில் அரசியல் சொல்வாக்கு இருக்கிறது போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், வைரமுத்து தமிழ் இனத்தின் அடையாளம். அவர் மீது இப்போது இந்த குற்றச்சாட்டை சொல்வதால், இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா? என எண்ணத் தோன்றுகிறது.
எல்லா கற்களும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்? பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மீதான குற்றச்சாட்டு குறித்து பலரும் பேச மறுப்பது ஏன்? பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் நடைபெற்றபோது, இவ்வளவு குரல் வராதது ஏன்? நியாயவாதிகளும், குற்றமற்றவர்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
சின்மயி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட சட்டப்படி நடவடிக்கை இதற்கு எடுக்க முடியாது என்கிறார். அப்போது வைரமுத்துவிற்கு அரசியல் செல்வாக்கு இருந்தது என்கிறார்.
அப்போதைவிட இப்போதுதான் வைரமுத்துவிற்கு அதிக செல்வாக்கு உள்ளது. குழு அமைத்து பெண்களை பாதுகாக்க வேண்டிய நிலை வந்ததற்கு நாம் வருத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.