சென்னையில் காதலனுக்காக கணவனை கொல்ல முயன்ற பெண் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கதிரவன் இவரது மனைவிஅனிதா. இவர்கள் இருவரும் திருவான்மியூர் கடற்கரைப் பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த இரு மர்ம நபர்கள் கதிரவனை கடுமையாக தாக்கி இவரது மனைவி அனிதாவிடம் இருந்து நகையை பறித்து தப்பிவிட்டனர். இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் அந்த வீடியோவில் கணவன் தாக்கப்படும்போது மனைவி அனிதா, பதற்றப்படாமல் நின்றது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அனிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மென்பொறியாளர் கதிரவனுக்கும், அனிதாவிற்கும் முப்பது நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் அனிதா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்துவரும் அந்தோணி ஜெகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அனிதாவை வலுக்கட்டாயமாக கதிரவனுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
இதையடுத்து அனிதா, காதலன் அந்தோணி ஜெகன் மூலம் கணவரைக் கொல்லத் சதிதிட்டம் தீட்டிய அனிதா, சதித்திட்டத்தின் படி, திருவான்மியூர் கடற்கரையோரம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கதிரவனை அழைத்துச்சென்று, அவரது கண்களைக் கட்டிக் கொண்டு அனிதா விளையாடியிருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த அனிதாவின் காதலன் அந்தோணி ஜெகன், ஆயுதங்கள் மூலம் கதிரவனை கடுமையாக தாக்கினார். விசாரணையில் இவை அனைத்தும் தெரியவர, அனிதாவையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதுங்கியிருந்த அந்தோணி ஜெகனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் தாக்குதலில் காயமடைந்த கதிரவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையேயே கதிரவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஜெகன் அளித்த வாக்குமூலம்:
திருமணம் முடிந்து கதிரவன் அனிதா தேனிலவு சென்ற போது, மலையில் இருந்து தள்ளி கொலை செய்ய முயன்றோம். அந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து நேற்று கதிரவனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்” என்று ஜெகன் தெரிவித்துள்ளார். அவரை மதுரை சென்று கைது செய்த ஆய்வாளர்களை தனிப்படையை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.