மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைப்பு? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதற்காக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, கடந்த வாரம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான காலால் வரியை 1.50 குறைத்து. மேலும், என்னை நிறுவனங்களும் 1 ரூபாய் குறைப்பதாக அறிவித்தது. மேலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் இந்தியன் ஆயில் கழகத் தலைவைா் சஞ்சீவ் சிங், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவனத் தலைவா் அனில் அகா்வால் உள்ளிட்டோா் கலந்து கொள்வாா்கள் என்று கூறியுள்ளனர்.