மாணவி கேட்ட சிக்கலான கேள்வி! பதிலை கொடுத்த அன்புமணி!

நேற்று சேலத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பாமக இளைஞரணிதலைவர் மருத்துவர் அன்புமணி கலந்து கொண்ட அன்புமணியை கேள்வி கேளுங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கேட்ட கேள்விக்கு அன்புமணி பதிலளித்து பேசினார்.

அப்போது மாணவி ஒருவர் இட ஒதுக்கீடு குறித்த சிக்கலான கேள்வியை எழுப்பினர். சாதிகள் குறித்த கேள்வி எனபதால் என்ன பதில் சொல்வார் என அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவர் சொன்ன பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல அனைவரையுமே ஏற்றுக்கொள்ளும்படியாக அமைந்தது.

சாதி வேறுபாடு இல்லை என்கின்றனர். ஆனால் பள்ளி கல்லூரியில் ஸ்காலர்சிப் கொடுக்கும் போது சாதி வாரியாக தான் தருகின்றனர். குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் தான் தருகின்றனர். நானும் ஏழை விவசாய குடும்பத்தில் தான் பிறந்தவள் தான் எனக்கு அந்த ஸ்காலர்சீப் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கு மட்டும் அரசு ஸ்காலர்சீப் கொடுக்கின்றது .அரசே இப்படி செய்தால் எப்படி மாணவர்கள் அனைவரும் ஒன்றாக பார்க்க முடியும் என்ற கேள்வியை மாணவி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அன்புமணி, நீங்கள் ஒன்றை புரிந்த கொள்ள வேண்டும். ஒரு சில சமுதாயத்தில் பார்த்தோம் என்றால் பல நூறு ஆண்டுகளாக சமுதாயங்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பல நூறு ஆண்டுகளாக ஐந்தாண்டு பத்தாண்டு நூறு ஆண்டு 200 ஆண்டுகள் அல்ல பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கபட்டுள்ளனர்.

அப்போது அந்த குறிப்பிட்ட சமுதாயங்கள் எல்லாம் குறிப்பிட்ட வேலைகளை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர். அந்த சூழ்நிலை மாற வேண்டும் என்றால் நிச்சயமாக அவர்களுக்கு அந்த சலுகைகள் கொடுத்தே ஆக வேண்டும்.

அதில் ஒரு தனி நபர் முன்னுக்கு வருவது முக்கியம் அல்ல. ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூகம் முன்னேற வேண்டும் அது தான் முக்கியம், அந்த ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும் வரை நீங்கள் சற்று பொறுமையாக தான் இருக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சமூக நீதி என்றால் என்ன அனைத்து சமுதாயமும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். ஒரு சில சமூகங்கள் கீழேயும் ஒரு சில சமூகங்கள் மேலேயும் இருப்பது சமூக நீதி அல்ல அனைத்து சமூகமும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். எப்பொழுது அனைத்து சமூகமும் படிப்பு பொருளாதாரம் வேலை வாய்ப்பில் ஒரே நிலையை அடைகின்றதோ அன்று தான் சாதி ஒழியும் என அவர் கூறினார்.

சாதியை ஒழிப்பதாக கூறும் பல தலைவர்கள், காதல் பன்னு, திருமணம் செய்தால் ஒழியும் என்பவர்கள் மத்தியில் அரசு கொடுக்குற பணத்தில் படித்து அனைவரும் முன்னேறுங்க சாதி ஒழியும் என்று கூறிய அன்புமணி மாணவர்களின் மத்தியில் மட்டுமில்லாது அனைவரின் பார்வையையும் பெற்றுள்ளார். தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு போராளி, எப்போதும் சமூகநீதி பேசும் டாக்டர் ராமதாஸின் மகன் சமூக நீதி குறித்து இவ்வளவு தெளிவாக பேசுவதில் யாருக்கும் ஆச்சர்யம் இருக்கப்போவதில்லை தானே!