ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் இறுதி கட்ட நெருங்கியிருக்கும் நிலையில் உள்ளது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
அக்., 2 ஆம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலாநிதிமாறன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sridhar master shares his experiences from the sets of Sarkar.#SarkarKondattam #Sarkar pic.twitter.com/uhP14hEbFs
— Sun Pictures (@sunpictures) October 13, 2018
இந்நிலையில், நடன இயக்குனர் ஸ்ரீதர், வழக்கம் போல சர்கார் படத்தில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறியுள்ளார். விஜய் நடனம் ஆடும் பாட்டில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பது என் வழக்கம். சர்கார் படத்திலும் ஒரு சர்ப்ரைஸ் வைத்து இருக்கிறேன். அது நிச்சயமாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்று கூறியுள்ளார்.