இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஈழத்தமிழர்கள் பல துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கனடா வாழ் ஈழத்துச் சிறுமியான ஜெசிகா தனது பாடல் திறமையால் அனைவர் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றினால் நடத்தப்பட்ட “சூப்பர் சிங்கர் 4” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெசிகா இரண்டாவது இடம் பிடித்திருந்தார்.
இதன்மூலம் பெற்ற 1 கிலோ தங்கத்தையும் இலங்கையில் அநாதரவாக விடப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கியிருந்தார்.
இதையடுத்து சிறந்த பாடல்களை வெளியிட்டு புகழின் உச்சிக்கு சென்ற ஜெசிகா தற்போது “Life is Beautiful” என்று ஒரே ஒரு முறைதான் என ஆரம்பமாகும் பாடலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.