நடிகர் மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்! காவல்துறை விசாரணை!

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் இடம்பெற்ற “ஓ போடு” பாடலில் கவர்ச்சியாக நடித்து ரபலமானவர் நடிகை ராணி. பல திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்தார். தற்போது சன் டிவியில் சுந்தர் தயாரிப்பில் உருவாகிவரும் நந்தினி தொடரில் நடித்து வருகிறார்.

இதே தொடரில் நடிகர் சண்முகராஜா நடித்து வருகிறார். இவர் கமலின் விருமாண்டி படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டு பெற்றவர். தற்போது இவரும் நந்தினி தொடரில் நடித்து வருகிறார்.

இத்தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் நடந்துவந்தது. படப்பிடிப்புக்கு இடையே நந்தினிக்கும் சண்முகராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ராணியை, சண்முகராஜா தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகை ராணி, சண்முகராஜா மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அதில், சண்முகராஜா தனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துவந்ததாகவும் இன்று தன்னிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சண்முகராஜா, காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.