அமெரிக்காவில் வெள்ளை நிற பெண் ஒருவர், கருப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகி, இனவெறி பிரச்சனை இன்றளவும் இருக்கிறதா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் இந்த அப்பார்ட்மெண்டிற்குள் கருப்பு நிற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளே செல்ல முயன்ற போது, அங்கிருந்த வெள்ளை நிற பெண் அவரை உள்ளே விட அனுமதிக்கவில்லை.
ஏனெனில் அவர் கருப்பாக இருக்கிறார், அதுமட்டுமின்றி இவனால் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி இவ்வாறு செய்துள்ளார்.
அதன் பின் பொலிசார் வரவழைத்த பின் அந்த நபர் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த நபர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், நான் என்னுடைய அப்பார்ட் மெண்டின் உள்ளே சென்ற முயன்ற போது, அந்த பெண் தடுத்தார்.
ஏனெனில் அவர் பாதுக்காப்பு இல்லை என்று இப்படி செய்துள்ளார், 30 நிமிட போராட்டத்திற்கு பின் பொலிசார் வந்த பின்னரே சென்றதாகவும், இன்றளவும் அமெரிக்காவில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை நினைத்து அதிர்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.