இலங்கை வீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்!

தெனியாய கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தின் வீடொன்றில் நேற்றையதினம் குழவிகள் உட்புகுந்து கொட்டியதால் குழந்தை உட்பட இருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.

வீட்டில் இருந்த 2 வயது குழந்தை மற்றும் குழந்தையின் பாட்டி ஆகியோரே குழவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், 2 வயது ஆண் குழந்தை ஒன்றும் அவரது பாட்டியும் வீட்டில் இருந்த போது வீட்டின் இரண்டாவது மாடியின் கூரையில் இருந்த குளவிக் கூடொன்று கலைந்தது. அதில் இருந்த குழவிகள் குழந்தையையும் பாட்டியையும் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கதறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையையும் பாட்டியையும் பறவையிடம் இருந்து மீட்டு இருவரையும் தெனியாய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 03.00 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளது. அதன் பின்னர் குழந்தையின் பாட்டி 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது உயிரிழந்தவர் 2 வயதுடைய இந்தூச தரிந்து மற்றும் 69 வயதுடைய கருணாவதி வன்னியாராச்சி என அடையாளம் காணப்பட்டுளனர்.

சடலம் தெனியாய வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.