நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராணி கூறியுள்ளார்.
கடந்த 1992 ம் ஆண்டு வெளியான வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராணி. மேலும் காதல் கோட்டை படத்தில் ஒரு நடனமாடியுள்ளார். நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து சரத்குமார் குடும்பத்தை கெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் மற்றும், நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் தற்போது சினிமாவை விட்டு சின்னத்திரையில் கால் பதித்துள்ள நடிகை ராணி நந்தினி சீரியலில் நடித்து வருகிறார். வடபழனி சாலிகிராமத்தில் கணவர் பிரசாந்துடன் தங்கியுள்ளார். மேலும் நந்தினி சீரியலில் ராணியின் கணவராக நடித்து வருபவர் சண்முகராஜன் (55). இவர் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை வடபழனியில் கடந்த 11-ஆம் தேதி தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகை ராணி சண்முகராஜனை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ராணியோ சண்முகராஜனை நிஜமாகவே அறைந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜன் ராணியிடம் தகராற்றில் ஈடுபட்டார். இதையடுத்து உடனிருந்தவர்கள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதனைத்தொடர்ந்து தொலைக்காட்சி தொடருக்காக சென்னை செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் தீபாவளிக்கு துணி எடுப்பது போல் ஒரு காட்சி நேற்று படமாக்கப்பட்டது.
அப்போது ராணி, அவரது கணவர் பிரசாந்த், சண்முகராஜன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவருடன் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்துக்கு சென்ற ராணி, கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சண்முகராஜன் ராணியிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து செங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அவர் வாபஸ் பெற்றார்