மகராஷ்டிராவில் வாலிபருக்கு பெண் ஒருவர் தொல்லை கொடுத்ததால் விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்ரப ஏந்படுத்தியுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மித்காரி(38). இவர் பர்பானியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் ஒருவர் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு சச்சினுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் தொல்லை தாங்க முடியாமல் விரக்தியடைந்த சச்சின் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சச்சினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்யும் முன்பு சச்சின் எழுதி வைத்த கடித்தத்தில் நான் திருமணமானவன் என்று தெரிந்தும் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு என்னுடன் பணிபுரியும் பெண் ஒருவர் தொல்லை கொடுக்கிறார். அவருடன் உறவு வைக்கவில்லை என்றால் கிரிமினல் கேஸ் போடுவேன் என்று மிரட்டுகிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சச்சினை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீது போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.