தமிழகத்தில் கந்துவட்டி கும்பலால் தற்கொலைக்கு துாண்டும் வகையில் துன்புறுத்தப்படுவதாக கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் புகாரளித்துள்ளார்.
விருதுநகரை சேர்ந்தவர் பிரபு. இவர் மனைவி அபிநயா. இவர்கள் தங்களது கைகுழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு வந்தனர்.
பின்னர் அபிநயா புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், என் கணவர் பிரபு டூவிலர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
அவர் ஆதவன் என்பவரிடம் கடன் வாங்கினார். நாளுக்கு நாள் அநியாயமாக கந்துவட்டி வசூலிக்கின்றனர். கடனை அடைத்த பின்னரும் வட்டி செலுத்தி வருகிறார். பொய் ஆவணங்கள் காட்டி கந்துவட்டி கும்பலால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம்.
இதற்கு பொலிசும் துணைபோகின்றனர். இந்நிலை நீடித்தால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
அபிநயா அளித்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.