சுவிட்சர்லாந்து மன நல மருத்துவமனைகளின் மொபைல் போனுக்கு அடிமையானோருக்கென தனியாக ஒரு துறை துவங்கப்பட்டுள்ளது.
பேஸல் பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவமனையில் இந்த மொபைல் போனுக்கு அடிமையானோருக்கான துறை துவங்கப்பட்டுள்ளதோடு சூரிச் மற்றும் பெர்னிலுள்ள மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன் வந்துள்ளன.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளை நாடுகிறார்கள். நம்மில் பலரும்கூட சமூக மற்றும் அலுவல் ரீதியான பயன்பாட்டுக்காக நம்முடைய மொபைல் போனை சார்ந்திருக்கிறோம் என்றாலும், அதற்காக நாம் எல்லோருமே மொபைல் போனுக்கு அடிமை என்று பொருள் இல்லை.
எப்போது பிரச்சினை வருகிறது என்றால் நண்பர்களும் குடும்பத்தாரும் அதிக நேரம் மொபைலிலேயே செலவிடுகிறீர்கள் என்று உங்களை குற்றம் சாட்டும்போதும், உங்கள் வேலை அல்லது படிப்பு பாதிக்கப்படும்போதும் மற்றும் மொபைல் போனில் நேரம் செலவிடுவதற்காக முக்கிய வேலைகளை நீங்கள் ஒத்தி வைக்கும்போதும்தான்.
பதின்ம வயதினர்தான் மொபைல் போனால் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள், பையன்கள் கேம் விளையாடுவதற்கும், பெண்கள் சமூக ஊடகங்களில் நேரம் செலவிடுவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான் அது அவர்களை பிரச்சினையில் கொண்டு போய் விடுகிறது.