மனைவியின் கல்லறைக்கு அருகில் கணவனைின் சடலத்தைப் புதைப்பதற்குத் தோண்டிய போது, பெண்ணின் சாறி ஒன்றைக் கண்ட உறவினர்கள் வியப்படைந்தனர்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் நடந்துள்ளது.
வசாவிளான் பகுதியிலுள்ள கல்லறை ஒன்றிலிருந்து 1979 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சடலம் ஒன்றிலிருந்த சாறியே கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டது. அக்கல்லறையில் அவரது கணவரைப் புதைப்பதற்குத் தோண்டப்பட்ட போது சாறி கண்டெடுக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டு சுகயீனம் காரமணாக உயிரிழந்த மனைவி குறித்த கல்லறையிர் புதைக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த அவரது கணவரை அடக்கம் செய்வதற்கு அவர்களது உறவினர்கள் குழி தோண்டினர்.
குறித்த கல்லறையிலிருந்தே அவரது மனைவிக்கு அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட அழியாமலிருந்த சாறி கண்டெடுக்கப்பட்டது.