இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை எச்சரிக்கை செய்த வீடியோ, #Metoo ஹேஷ்டேக்கில் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது #MeToo ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சமூகவலைதளங்களில் பெண்கள், நடிகைகள் என பலரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் தொகுப்பாளினி கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதிலளித்தார். பேட்டி முடிந்ததும் குறித்த தொகுப்பாளினி, டிராவிட்டின் அருகில் வந்து அமர்ந்து தான் உங்களது பெரிய ரசிகை என்றும், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த டிராவிட் குறித்த தொகுப்பாளினியை திட்டியுள்ளார். அவரை தள்ளிப்போகுமாறு கூறினார். பின்னர், உன் வயதென்ன? படிப்பில் கவனம் செலுத்து என்று கூறிவிட்டு உடனடியாக அறையை விட்டு வெளியேற முயன்றார்.
அப்போதுதான் அது Prank செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. எனினும், தன்னிடம் நெருங்கி வந்த பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொண்ட டிராவிட்டின் செயலை பாராட்டி, சிலர் #MeToo ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
The only #MeToo expose that will shock me, if it ever happens will be Rahul Dravid. Please never let it happen.
— Divya (@divya_16_) October 14, 2018