தன் கோயிலில் திருட வந்தவனுக்கு கடவுள் முருகன் கொடுத்த தண்டனை…..!

தன் கோயிலில் திருட வந்தவனுக்கு கடவுள் முருகன் கொடுத்த தண்டனையைப் பாருங்கள்…..!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ரயில் நிலையம் அருகே, பழமையான முருகன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலை சங்கர் என்பவர் பராமரித்து வருகிறார். கோயில் சேதமடைந்ததால், அருகில் உள்ள தன் ஓட்டு வீட்டில், கோயில் ஒன்றை அமைத்து, அதில், அந்த முருகன் சிலை, மற்றும் பூஜை சாமான்களை வைத்து பராமரித்து பூஜித்து வருகிறார்.

இரவில் கோயிலை வழக்கம் போல, பூட்டி விட்டுச் சென்றார், சங்கர். நள்ளிரவில், யாரோ ஒரு திருடன், அந்தக் கோயிலின் பின் வழியே உள்ளே நுழைந்தான். அங்கிருந்த சிலை, மற்றும் பூஜை சாமான்களை எல்லாம் ஒரு சாக்கில் எடுத்து வைத்து விட்டு சுவர் ஏற முயன்றுள்ளான்.

ஆனால், விதி இங்கே தான் முருகன் ரூபத்தில் விளையாடி உள்ளது. சாமான்களுடன், சுவர் ஏறிக் குதிக்க முயன்றவனின் பின்னந்தலையில் மேற் கூரை நன்றாக இடித்து விட்டது.

இதனால், நிலை தடுமாறிய அந்த திருடன், அப்படியே. தான் எடுத்த பொருட்களுடனே, கோயிலுக்குள் விழுந்து மயங்கி கிடந்தான். காலையில், கோயிலைத் திறந்து பார்த்த சங்கர் அதிர்ச்சி அடைந்தார். கோயிலில் உள்ள பொருட்கள் மூட்டை கட்டி வைத்திருப்பதையும், அருகில் திருடன் மயங்கி கிடப்பதையும் கண்டு, உடனடியாக, காவல் துறைக்கு தகவல் தந்தார்.

அவர்கள் வந்து, திருடனின் முகத்தில் தண்ணீர் அடித்து தெளித்த போது தான் மயக்கம் தெளிந்து எழுந்தான். அவனை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.