இரட்டை பெண் குழந்தை….! அதனால் மனைவியை விட்டு ஓடினான் கணவன்…..! கைக் குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்….!

பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது….! அதனால் மனைவியை விட்டு ஓடினான் கணவன்…..! கைக் குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்….! பரிதாபம்….!

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் அருகே நெல்மடூர் என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் வசித்து வருகிறார் தர்மராஜ் . கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் பானுப்ரியா (வயது 26).

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான், இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில், பானுப்ரியாவிற்கு பிரசவம் ஆனது. அதில், அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

இதனால், தர்மராஜ், மிகவும் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில், திடீர் என்று சொல்லாமல் கொள்ளாமல், வீட்டை விட்டு வெளியேறினார் தர்மராஜ். அவருடைய வருமானத்தில் தான் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

இதனால், பரிதவித்துப் போன, பானுப்ரியா பல இடங்களில் தன் கணரைத் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. பின், பானுப்ரியா, தன் தாய் சண்முகவள்ளி மற்றும் தன் இரட்டைப் பெண் குழந்தைகளுடன், ராமநாதபுரம் கலெக்டரிடம் சென்று நேரடியாக மனு கொடுத்தார்.

அதில், காணமால் போன தன் கணவனை மீட்டுத் தரக் கோரியும், தன் பிள்ளைகளைக் காப்பாற்ற, தனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டார்.

அந்தப் பெண்ணிற்கு உதவி செய்வதாக, கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.