கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அழைத்த வங்கி அதிகாரியை நடுரோட்டில் புரட்டியெடுத்த பெண் (வீடியோ)

பேங்க் லோன் வேண்டும் என்றால் படுக்கை அறைககு வா என்று அழைப்பு விடுத்த வங்கி அதிகாரியை, லோன் கேட்டு வந்த பெண் நடுரோட்டில் வைத்து கட்டையால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் தேவனகெரே மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் அப்பகுதியில் இருக்கும் டிஎச்எப்ல் (DHFL) கடன் நிறுவத்தில் ரூ.2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் தேவையான, அந்த பெண்ணிடம் பாலியல் சம்பந்தமாக பேசி வந்துள்ளார். மேலும், கடன் தேவையென்றால் தன்னை கவனிக்க வேண்டும் என்று கூறியவர், தனது படுக்கை அறைக்கு வந்து தன்னை திருப்திபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்மனி வங்கி மேலாளர் தேவையாவை நடுரோட்டுக்கு இழுத்து வந்து , அந்த பகுதியில் கிடந்த மர கட்டையால் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக தாக்கி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.