அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கட்சி விழாவில் விரைவில் அதிமுகவிற்கு ஒரு பெண் தலைமையேற்று வழி நடத்தி செல்லும் காலம் வரும் என்று கூறினார்.
இதனை சரியான நேரத்தில் கவனித்த தினகரன் செல்லூர் ராஜூ கூறிய பெண் வேறு யாரும் இல்லை. அது சசிகலா தான்.
அவர் பெயரை நேரடியாக சொல்ல துணிச்சல் இன்றி இப்படி சூசகமாக கூறியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய தினகரன், அம்மாவின் ஆட்சி காலத்தில் அதிமுகவிற்கு ஒரு பெண் தலைமை மட்டுமே இருந்தார்.
இப்போதும் அதிமுகவிற்கு ஒரு பெண் தான் தலைமையாக உள்ளார். கட்சியின் பொதுசெயலாளராக சசிகலா தான் பதவி வகிக்கிறார்.
முதல்வர் எடப்பாடி மீது தொடரப்பட்ட வழக்கிற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டி உத்தரவிட்டுள்ளனர்.
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளாகியுள்ள எடப்பாடி பழனிசாமி தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியிலிருந்து விலக வேண்டும்.
ஆனால் அப்படி பதவி விலகும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்தன்மையோ, தைரியமோ கிடையாது. அவர் அது போன்று நடந்து கொள்ள மாட்டார். ராஜினாமா செய்ய மாட்டார்.
ஒருவேளை சி.பி.ஐ. விசாரணை செய்து வழக்கு விசாரணை நடைபெற்று அது கைது செய்யும் அளவுக்கு சென்றால்தான் அவர் பதவியில் இருந்து விலகுவார். அவரிடம் அதுபோன்ற பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது.
எதிர்க்கட்சியை விட எங்களுக்கு பழனிசாமியை பற்றி நன்றாக தெரியும். நிச்சயம் பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்; என்று கூறியுள்ளார்.