ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை ரத்து செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 5000 ரூபா நாணயத் தாள்களை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இறக்குமதிகளை வரையறுப்பதனை விடவும் அரசியல்வாதிகளின் நன்மதிப்பினை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் செலவுகள் குறைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் கறுப்பு பணத்தை வெளிக் கொணரும் நோக்கில் நிதி அமைச்சராக கடமையாற்றிய என்.எம். பெரேரா 100 மற்றும் 50 ரூபா நோட்டுக்களை ரத்து செய்திருந்தார் எனவும் அதே விதமாக 5000 ரூபா தாளையும் குறைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தளங்கள், அரசியல்வாதிகள் போன்ற தரப்புக்களிடம் பாரியளவில் ஐயாயிரம் ரூபா நாணயத்தாள் காணப்படுவதாகவும் கொள்கலனில் நிரப்பும் அளவிற்கு பணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.