மாடல் அழகியைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம் மும்பையில் நடந்தேறியுள்ளது. அழகியை கொன்ற வழக்கில் கல்லூரி மாணவரை கைது செய்து போலீசர் விசாரித்து வருகின்றனர்.
மான்சி திக்ஷித் என்ற இளம் பெண்ணுக்கு வயது 20. இவர் ராஜஸ்தான் கோட்டாவிலிருந்து மும்பைக்கு தன் மாடலிங் துறை கனவுகளை நிறைவெற்றிக்கொள்ள குடிபெயர்ந்தார். இந்நிலையில் இவரது ஆண் நண்பரா, காதலரா என்று தெரியாத ஒரு உறவில் 19 வயது கல்லூரி மாணவர் முஸமில் சையத் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அந்தேரியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மாடலிங் தொழிலில் பெரிய கனவுகளுடன் நுழைந்த மான்சி திக்ஷித் கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து வீசியுள்ளனர். திங்களன்று மும்பை மேற்கு புறநகர்ப்பகுதியான மலாத்தில் சூட்கேசில் மான்சியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மான்சி கொலைக்குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது முஸமில் சையத் என்ற மாணவர் சிக்கினார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சையத் ” மான்சியை கொலை செய்யும் நோக்கமில்லை, வாக்குவாதம் முற்றியதால் ஸ்டூலால் தாக்கியதில் அவர் இறந்தார் ” என்று கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று மலாத்தில் மான்சியைக் கொன்று அவரது உடலை சூட்கேசில் அடைத்து காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் சூட்கேசை வீசி விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளார், இதனை கார் ஓட்டுநர் கவனிக்க அவருக்கு கடும் சந்தேகம் எழுந்துள்ளது.இதையடுத்து போலீசாருக்கு ஓட்டுநர் அளித்த தகவலை தொடர்ந்து, அவர்கள் சூட்கேசைக் கைப்பற்றி உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காமிராப் பதிவுகளையும், கார் ஓட்டுநரின் உதவியுடனும் சையத்தைக் கைது செய்தனர்.