சீனாவில் திரைப்பட நடிகர்களிடையே அதிகபட்ச சம்பளம் வாங்குவதில் இரண்டாம் இடத்தில் இருக்கும் செள யூன் ஃபாட் என்பவர் தனது மொத்த சொத்தான 542 மில்லியன் பவுண்டுகளை தொண்டு நிறுவங்களுக்கு பகிர்ந்து அளிப்பதாக அறிவித்துள்ளார்.
சௌ யூன் ஃபாட், பைரேட்ஸ் ஆப் தி கரிபியன், கிரௌசிங் டைகர், ஹிடன் டிராகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் சர்வதேசப் புகழ் பெற்றவர்.
இவர் ஹாங்காங் ஊடகங்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி, அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
தன்னுடைய தேவைகள் மிகவும் குறைவு என குறிப்பிட்டுள்ள செள யூன், தமது மொத்த சொத்துக்களையும் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, சாதாரண உணவகங்களில் சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கும் சௌ யூன், நான் அடுத்தவருக்காக உடை அணிவதில்லை, எனக்கு அது வசதியாக இருந்தால் போதுமானது என விளக்கமளித்துள்ளார்.
மேலும், சாதாரண தள்ளுபடி கடைகளில் கிடைக்கும் துணிகளையே அவர் விரும்பி அணிவதாகவும் கூறப்படுகிறது.
அவர் தானமாகக் கொடுக்கவிருக்கும் 542 மில்லியன் பிராங்கள் சொத்து தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, இந்தப் பணம் என்னுடையது அல்ல, தற்போதைக்கு அதைப் பத்திரப்படுத்தி வைக்கவே என்னிடம் கொடுக்கப்பட்டது.
சாதாரணமான, மகிழ்ச்சியான ஒரு மனிதனாக வாழ்வதே என் கனவு. வாழ்வில் மிகவும் கடினமானது பணம் சம்பாதிப்பது அல்ல, மாறாக அமைதியான மனநிலையோடு, கவலையற்ற எளிமையான வாழ்க்கையை வாழ்வதே கடினமானது என்று தெரிவித்துள்ளார்.