உலகின் முன்னணித் கிரிக்கெட் வீரர்களில் தனக்கென ஒரு இடத்தை நிலைத்து நிற்க வாய்த்த வீரர். டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் மனதில், ஸ்டம்ப்க்கு முன் சுவர் எழுப்பியது போல் தோன்ற வைத்த ஒரு அசாத்திய வீரர்.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என இரண்டிலும் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை புரிந்த வீரர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘சிறந்த ஆட்டக்காரர்’ மற்றும் ‘சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்’ விருதினை வெற்ற வீரர்.
முத்தாய்ப்பாக, டெஸ்ட் போட்டிகளில் உள்ள அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே ஒரு வீரர் என்ற பெருமையினை பெற்றவர். என பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ”ராகுல் ட்ராவிட்” தனது இளமை காலத்தில் புகழின் உச்சிக்கே சென்று இருந்த நேரம் அது.
அந்த நேரத்தில் அவரிடம் பெண் நிருபர் ஒருவர் தவறாக நடந்துக்கொள்ள முற்படும் பொது, அந்த பெண்ணிடம் இருந்து கண்ணியமான முறையில் வெளியேறி முற்படும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.