மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயதான சச்சின் மிட்காரி. இவர் அந்த நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்துள்ளார்.
அப்போது தன்னுடன் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நண்பர்கள் போல உருவான இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது.
சச்சினுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவர் மீது உடலுறவு கொள்வதில் அதிக ஆர்வம் காண்பித்தார் அந்தப்பெண்.
இதன் பின்னர் தொடர்ந்து அடிக்கடி அவரை உறவுக்கு அழைத்து நச்சரித்து வந்துள்ளார்.
தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தினமும் பல முறை உறவுக்கு அழைத்ததால் மன உளைச்சலுக்குள்ளான சச்சின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சச்சின் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.