மைக்ரோசொப்டின் இணை நிறுவனர் மரணம்!

மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் இணைநிறுவனர் போல் அலன் தனது 65 வயதில் மரணம் அடைந்துள்ளார். போல் அலனின் மரணம் தனது இதயத்தை நொருங்கியதாகமைக்ரோ சொப்ட்டின் இன்னொரு நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக இரத்தபுற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளான அலன் 2009இல் அதில் ஓரளவு குணமடைந்திருந்தார். ஆயினும் மீண்டும் இரண்டுவாரகாலத்துக்கு முன்னர் அதே நோயின் தாக்கம் கண்டறியப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

பில் கேட்ஸ்சும் அலனும் தமது கல்லூரிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியதுடன் 43 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தனர்.

அதன்பின்னர் மைக்ரோசொப்டில் புதிய விடயங்களைப் புகுத்தி, அதனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அலன், ஒருகட்டத்தில் அந்த நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு புற்றுநோய் தாக்கியதால் ஓய்வெடுத்துவந்த அவர் தனது சகோதரியுடன் இணைந்து தனியார் நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில் மீண்டும் அவரை புற்றுநோய் தாக்கியது

உலகின் 44-வது செல்வந்தரான அலன் அதில் பெரும்பாலான தொகையை தர்ம காரியங்களுக்காகச் செலவிட்டமை குறிப்பிடத்தக்கது.